நண் "பா"

பாலில் நனைத்த பன்னீர நட்பு ? - இல்லை
உணர்வில் நனைத்த உண்மையே நட்பு!
கள்ள உள்ளமின்றி
சிரிப்புக்கு பஞ்சமின்றி
காசுக்கு கஞ்சமின்றி
கனவுக்கு கலைவின்றி
படிப்புக்குள் பாரபட்சமின்றி
பண்ப்புக்குள் பகையின்றி
பேருக்குள் பேதமின்றி
நடப்புக்குள் நகைசுவையாய்
நாளும் தேன்சுவையாய்
உள்ள ஒளிவின்றி
உள்ள தெளிவு கொண்டு
கல்லுக்குள் எடுத்த நீர்தான் நட்பு !



வண்ண வண்ண பூக்கள்!

பெண்ணே...!
உவமைகள் பல கொண்டு
என் உலகை ஆட்கொண்டு
உன் உடமை உயிர் வரைக்கும்
அளந்து சொல்லும் கவிதை
---சித்தரிப்பு


அன்ன நடை கொண்டு
பன்முக நகை கண்டு
உன் அடி பாதம் மெல்ல
மண் மீது எடுத்து வைத்தல்
--- அணிவகுப்பு

மென்குழல் கை கொண்டு
இதழ் விரி மலர் கண்டு
விரல் மலர் வாள் கொண்டு
செல்லமாய் கிள்ளி எடுப்பது
---பாவ மன்னிப்பு

மெல்லிய இதழ் விரித்து
சொல்லும் வார்த்தையெல்லாம்
வான் உயர் தேவதையின்
உள் அக உச்சரிப்பு
---மொழி பெயர்ப்பு

சிற்பி இமை திறந்து
முத்து விழி கொண்டு
உன் உயிர் சேர்த்து
என் உலகை பார்பதனால்
நீ என்னை காதலிக்கிறாய் !
--- கருத்துக்கணிப்பு

சில நேரம் பார்க்கிறாய்
பார்த்ததும் சிரிக்கிறாய்
என்னதான் சொல்வாய் ...
உன்னையே தொடரும்
---கண்காணிப்பு

உன்னை காண நான்
மறக்காமல் அவதரிப்பேன்
தலை சாய்த்து பார்த்து விட்டு
உன் புது மலர் இதழ்களில்
--- புன்னகைபூ



காதல் கடிதம்

வெள்ளை தாள்களில்
உள்ள குமுறல்கள்
வர்ணம் தீட்டபடுகிறது..!

கண்ணில் காணும் பொருள்களெல்லாம்
கவிதை உவமை ஆகிறது ...!
ஓய்வு பெற்ற குப்பை தொட்டி
வாய் விட்டு கதறி அழுகிறது...!

தானாக பேசி
வீணாக சிரித்து
பேனா மையெல்லாம்
உணர்வுகளாக பிறக்கிறது...!