ரயில் காதல்


வானத்திலிருந்து
இறங்கும்
என்பார்கள்-
இங்கே
ஏறுகிறது
ரயிலில் !
என் தேவதை!

 டிராபிக் ஜாம்
பஸ்சுக்குதானா?
பைத்தியம் போல்
யோசிக்கிறது
பாழாய்ப்போன
மனசு!

நிச்சயம்
அது
தொடர் வண்டிதான்!
உன்னை
நான்
பின்தொடரும்
வண்டி!

கொஞ்சம் கவனி!
 நீ கை
வைத்திருக்கும்
கை பிடிக்கு
முன்னால்
தொங்கி
கொண்டிருகிறது
என் மனசு!

மாற்ற
முடியாத விதி!
தகர
பெட்டிக்குள்
தங்கம்!

 அந்த
வெள்ளை
சட்டை காரனுக்கு
மட்டும்
எவ்வளவு
தைரியம் ?
நேரடியாய்
உன்னிடமே
கேட்டுவிட்டான்!-
பயணச்சீட்டு!

 அவள்
வருகையின் போது
ரயிலுக்காக
காத்திருக்கும்
மக்களைப்போல்
ஆர்ப்பரிக்கிறது
மனசு! - அவள்
விட்டு பிரிகையில்
ரயில் சென்றபின்
தனியாய் விடப்பட்ட
ரயில் நிலையம்போல்
வெறிச்சோடி கிடக்கிறது!

என்
வாழ்க்கையின்
ஏற்றமும்
இறக்கமும்
ஒரே இடத்தில்!
ரயில் நிலையம்!0 Comments:

Post a Comment